Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தீ விபத்தில் கல்லூரி மாணவி பலி

பதிவு செய்த நேரம்:2013-03-23 11:13:48
MORE VIDEOS

மதுரை, : உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்த பழனி மகள் அம்ச லட்சுமி(18). உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஏ.புதுப்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைசுற்றல், காய்ச்சல் இருந்து வந்தது.
உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அம்சலட்சுமி மயக்கம் போட்டு ஸ்டவ் மீது விழுந்தார். உடல் முழுவதும் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran