தாய், மகளை சரமாரி தாக்கியவர் கைது
பதிவு செய்த நேரம்:2013-03-23 11:13:29அவனியாபுரம், : கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தாய், மகளை சரமாரியாக தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டை சேர்ந்தவர் ராஜாத்தி(53). இதே பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர்(39). இவர், ராஜாத்தியிடம், தனது வீட்டின் மாடியில் வீடு கட்டி தருவதாகவும், அதற்கு ரூ.70ஆயிரம் பணம் கொடுக்கும்படியும் கேட்டார். ராஜாத்தியும் இதனை நம்பி கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் பணம் கொடுத்தார்.
வீட்டை கட்டி முடித்த ஞானசேகர் பேசியபடி வீட்டை கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்து வந்தார். இதுகுறித்து கேட்க ராஜாத்தி, தனது மகள் செல்வியுடன் சென்றார். அப்போது ஞானசேகர், இவரது மனைவி தேவி(36) மற்றும் தாயார் சிட்டுப்பிள்ளை(68) ஆகியோர் சேர்ந்து ராஜாத்தியையும், செல்வியையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ராஜாத்தி புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் ஞானசேகரை கைது செய்தனர்.










