மாவட்டத்தில் 39,352 எக்டேர் பரப்பில் நெல் அறுவடை நிறைவு
பதிவு செய்த நேரம்:2013-03-23 10:55:56திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் 39,352 எக் டேர் பரப்பில் நெல் அறு வடை பணிகள் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்து பேசியது:
திருச்சி மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி 44, 686 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வருகி றது. இதுவரை 39,352 எக் டேரில் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சூரிய சக்தி யின் மூலம் இயங்கும் 36 பம்ப்செட்கள் டெல்டா பகுதி வட்டாரங்களில் 80% மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், யூரியா 5,707 மெ.டன், டிஏபி 5,889 மெ.டன், பொட்டாஷ் 2,829 மெ.டன் மற்றும் கூட்டுரம் 3,594 மெ.டன் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கி மற் றும் தனியார் உரக்கடைகளிலும் போதிய இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், டிஆர்ஓ தியாகராஜன், வேளாண் இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாண்டியராஜன், கால் நடை துறை மண்டல இணை இயக்குனர் நாக ராஜ், தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திரசேகர், வேளாண் பொறி யியல் துறை செயற்பொறி யாளர் தியாகராஜன், மின் சார வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தமிழ்செல்வன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.
50% மானியத்தில்
காய்கறி விதைகள்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 2,025 எக்டேர் பரப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான உயர் விளைச்சல் தரும் காய்கறி விதை கள் மற்றும் வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்று கள் 50 சத மானிய விலை யில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் கூறினார்.









