Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பங்குனி தெப்ப உற்சவம் யானைவாகனத்தில் தாயுமானவர் உலா

பதிவு செய்த நேரம்:2013-03-23 10:55:51
MORE VIDEOS

திருச்சி, : திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்ப உற்சவத்தின் 6ம் திருநா ளான நேற்று தாயுமான வர் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந் தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி தெப்ப உற்சவ திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை யொட்டி தினமும் இரவு 7 மணிக்கு தாயுமானவர் சுவாமி, மட்டுவார் குழலம் மை தனிதனி வாகனங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் 6ம் திருநா ளான நேற்று தாயுமான வர் யானை வாகனத் திலும், மட்டுவார் குழலம்மை அம்பாள் பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 9ம் திரு நாளான 25ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருச்சி மண்டல கோயில்களின் இணை ஆணையர் புகழேந்திரன், கோயில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran