நிவாரணம் பாதிக்கும் வகையில் விவசாயிக்கு தெரியாமல் பயிர்ச்சேத மதிப்பீடு
பதிவு செய்த நேரம்:2013-03-23 10:55:43திருச்சி, : விவசாயிகளுக்கு தெரியாமல் சேத மதிப்பீடு செய்வதாகவும், இதனால் நிவாரணம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் மீது விவாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்க துணை செயலாளர் சுப்ரமணியம் பேசுகையில், திருச்சி கோட்டத்தில் காவிரியில் பிரியும் 17 வாய்க்கால்களை தூர்வார வும், பழுதுகளை நீக்கவும் அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடி க்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலா ளர் அயிலை சிவசூரியன் பேசுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், கால்நடைகளுக்காகவும் உய்யக்கொண்டான்- கட்டளை மேட்டுவாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் மாசிலாமணி பேசுகையில், வறட்சியால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை மதிப்பிடு வதில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரியாமல் வருவாய் மற்றும் விவசாய வேளாண் துறை அதிகாரி கள் மதிப்பீடு செய்வதாக தெரிய வருகிறது. இதனால் நிவாரணம் பெறுவதில் விவசாயிகள் பாதிக்கப்படு வர். கலெக்டர் தலையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும் என்றார்.
பாரதீய கிசான் சங்க மாநில துணை தலைவர் அய்யாக்கண்ணு பேசுகை யில், வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.7 ஆயி ரம் கோடிபேரிடர் நிதியாக வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என் றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவர் புலியூர் நாகராஜன் பேசுகையில், விவசாய கடன் முழுவதை யும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஜப்தி நடவடிக் கையை கைவிட வேண்டும். விவசாயிகள் தற்கொலை யை தடுக்க வேண்டும் என் றார்.
அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் வீரசேகரன் பேசு கையில், கடந்த காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவா ரணம் வழங்கியது போல் சாகுபடியாளர் அனை வருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் 17 வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்றார்.
கிணறு வெட்ட
மானிய கடன்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கும் ஆழ்குழாய் கிணறு வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழ ங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.










