Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் அழிவுகளை தடுக்க அதிநவீன ஆய்வு கூடபயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-03-23 10:09:07
MORE VIDEOS

தென்பிராந்திய சி.ஆர்.பி.எப். தலைவர் தொடங்கிவைத்தார்
பெ.நா.பாளையம், :  கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் அதிநவீன ஆய்வு பயிற்சி வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியில் குண்டு வீச்சு, அணுக்கதிர்வீச்சு, வேதியல் விளை வுகள் மற்றும் இயற்கை செயற்கை அழிவுகளில் கதிர்வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள மத்திய போலீஸ் மையத்தில் இருந்து போலீசார் இங்கு பயிற்சி பெறுகின்றனர். என்.பி.சி. என்ற அழைக்கப்படும் மிக பேராபத்தை விளைவிக்க கூடிய அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்தவும் சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்கான பிரத்யேக பயிற்சி வகுப்பை நேற்று காலை மத்திய ரிசர்வ் போலீசின் தென்பிராந்திரய தலைவர் என்.ஆர்.கே.ரெட்டி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகை யில், ‘இந்தியாவிற்கு இங்குள்ள சூழ்நிலையில் இதுபோன்ற அணுகதிர்வீச்சுகளால் ஏற்படும் விளைவு களை கட்டுப்படுத்தும் பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது.
ஜப்பானில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சின் விளைவுகளை கட்டுப்படுத்தியதை மையமாக கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளால் ஏற்படும் கதிர்வீச்சுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநில போலீஸாருடன் இணைந்து இக்குழுவினர் பொதுமக்களை பாதுகாக்க செயல்படுகின்றனர்’ என்றார்.
 இப்பயிற்சி கல்வி அலுவலகத்தில் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் பயிற்சியையும் பெண் காவலர் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள உரிமைகள் செயல்பாடுகள் குறித்தும் 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் டி.ஐ.சி .சேகர், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran