Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

இலங்கை அரசை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல், முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-03-23 10:09:01
MORE VIDEOS

கோவை, :  இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்த வலுவற்ற தீர்மானத்தை கண்டித்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை,யிலும் கல்லூரி மாணவர்கள், அரசியல் அமை ப்பினர்களின் போராட்டம் கோவையில் நேற்றும் தொடர்ந்தது.
சாலை மறியல் : கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கல்லூரி, தனியார் கல்லூரியை சேர்ந்த கோவை தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் கோவை டவுன்ஹால் பகுதியில் நேற்று திடீரென குவிந்தனர். பின், ராஜபக்சேவை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் டவுன் ஹால் -பெரியகடைவீதி சாலையில் அமர் ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அதில் ஒரு தரப்பினர், மறுபக்கம் உள்ள சாலையில் அமர்ந்து கண்டன கோஷங் களை எழுப்பினர். பின், தாங்கள் மறைத்து வைத்திருந்த ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். ஜெனீவா மாநாட்டில் அமெ ரிக்கா கொண்டு வந்த நீர்த்துப் போன தீர்மானத்தை கண்டித்து அமெரிக்க நாட்டின் தேசிய கொடியை தீயிட்டு கொளுத்தினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் சீனிவசலு, தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 49 பேரை கைது செய்தனர். மாணவர்களின் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முற்றுகை : இலங்கை மீது பொருளாதார தடை விதி க்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், மத்திய காங் கிரஸ் அரசை கண்டித்தும், ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதர வாக வாக்களித்த நாடுக ளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செய லாளர் சந்திரன் தலை மையில் கணபதி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான சரவணம்பட்டி போலீசார், நாம் தமிழர் கட்சியினர் 14 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran