பேரூர் கோயிலில் இன்று தேரோட்டம்
பதிவு செய்த நேரம்:2013-03-23 10:08:44கோவை,: மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6 ம் திருநளான நேற்று திருக்கல்யண உற்சவம், பஞ்சமூர்த்திகள் உலா, வெள் ளை யானை சேவை நிகழ்ச்சி நடந்தது.
ஏழாம் திரு நாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. மாதம்பட்டி சிவகுமார் குடும்பத்தினர், பேரூர் ஆதி னம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், ஞான சிவாச்சாரியார், பொன்மாணிக்க சுவாமிகள் ஆகியோரை தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். அமைச்சர்கள் தமோதரன், ஆனந்தன், துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.










