சோள உப்புமா
மாற்றம் செய்த நேரம்:3/22/2013 5:04:45 PM
என்னென்ன தேவை?
சோள அரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப் (விரும்பினால்),
நீளமாக கீறிய பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 3 கப்.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
சோள அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் அனைத்தையும் மிக்ஸியில் ரவை பதத்துக்குப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பு பொருள்களுடன் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து பொடித்த சோள ரவையைக் கொட்டி 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். குக்கரை மூடி மேல் விசில் போடாமல் மூடி வைத்து, குறைந்த தணலில் 20 நிமிடங்கள் வேகவிடவும். இடையில் சில முறை கிளறிவிட வேண்டும்.
தேவைப்பட்டால் இன்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி தேங்காய் சட்னி அல்லது கொத்சுடன் பரிமாறவும். 4 இந்த வகை உப்புமாவில் விரும்பினால் வெங்காயம் சேர்க்கலாம். எண்ணெய் சிறிது தாராளமாக ஊற்றினால் மிருதுவாக வேகும்.




















