திருவண்ணாமலை கோயிலில் 26ல் திருக்கல்யாண உற்சவம்
கருத்துகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 26ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாணமும் ஒன்று. இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. அன்று பகல் 11.05 மணிக்கு மேல் 1.05 மணிக்குள் சுவாமி கருவறையில் மூலவர் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, அம்மன் சமேதராக அண்ணாமலையார் தங்கக் கொடி மரம் அருகே எழுந்தருளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெறும். மறுநாள் 27ம் தேதி கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படியும், 28ம் தேதி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 29 மற்றும் 30ம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். 31ம் தேதி பகல் 12 மணி அளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.


























முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!